1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (19:47 IST)

சசிகலா ஆதரவு அணியில் சண்டை ஆரம்பம்: எம்எல்ஏ வெற்றிவேல் போர்க்கொடி!

சசிகலா ஆதரவு அணியில் சண்டை ஆரம்பம்: எம்எல்ஏ வெற்றிவேல் போர்க்கொடி!

அதிமுகவின் இரு அணிகளும் இணைய உள்ளது என்பது தான் தமிழகத்தின் இன்றைய டாப்பிக்காக உள்ளது. கட்சியின் நலன் கருதி இரு அணிகளும் ஒன்றாக இணைவது தான் நல்லது என இதுநாள் வரை சசிகலா அணியில் இருந்த அமைச்சர்கள் கூற ஆரம்பித்துவிட்டனர்.


 
 
நேற்று இரவு அமைச்சர் தங்கமணியின் வீட்டில் அனைத்து அமைச்சர்களும் அவசர ஆலோசனை நடத்தினர். இன்று ஓபிஎஸ் அணியுடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுவையும் அமைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
 
இது ஒருபுறம் இருக்க தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் அதிமுக கட்சியில் இருந்து வெளியேற்ற அனைத்து அமைச்சர்களும் முடிவெடுத்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.
 
இந்நிலையில் இதற்கு அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தை யாரும் வெளியேற்ற முடியாது என அவர் கூறியுள்ளார்.
 
டிடிவி தினகரனை இன்று சந்தித்து பேசிய வெற்றிவேல் எம்எல்ஏ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஓ.பன்னிர்செல்வத்தை வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது என விமர்சித்தார்.
 
மேலும் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டம் டிடிவி தினகரனுக்கு தெரியாமல் நடந்தது. அமைச்சர்கள் என்றால் எல்லாம் என்று கிடையாது. கட்சி இணைப்பு பற்றி பேச அமைச்சர் ஜெயக்குமாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. தம்பிதுரை எங்கே இடையில் இருந்து வந்தார். சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து வெளியேற்ற முடியாது எனவும் கூறினார்.
 
இந்த பேட்டியின் போது அமைச்சர்களை எம்எல்ஏ வெற்றிவேல் விமர்சித்தார். அனைவரும் ஒரே அணியில் இருக்கும் போது எம்எல்ஏ வெற்றிவேல் மட்டும் தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார். மேலும் ஓபிஎஸ் அணி முதல்வர் பதவி உட்பட 6 அமைச்சர்கள் பதவியை கேட்பதாக கூறினார்.