திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 16 அக்டோபர் 2021 (07:48 IST)

சிங்கம் மீண்டும் கர்ஜித்துள்ளது: சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சிங்கம் மீண்டும் கர்ஜித்துள்ளது: சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சிங்கம் மீண்டும் கர்ஜித்துள்ளது என்று பாராட்டு தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த நிலையில், ‘மீண்டும் ஒருமுறை சென்னை சிங்கங்கள் அவர்களது கர்ஜனையை வெளிப்படுத்தி உள்ளனர். 4-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை அணைக்கும் அதைக் கொண்டாடி வரும் ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் இந்த வெற்றியை கொண்டாட தோனிக்காக சென்னை காத்திருக்கிறது என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மட்டுமின்றி அனைத்து மாநில முதல்வர்கள் பிரதமர் உள்பட அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.