வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (09:12 IST)

தமிழுக்கு இன்னொரு அணிகலன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆல்பம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து அவரது ஆல்பத்தை கேட்டு ரசித்தார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு நடைபெற்று வரும் எக்ஸ்போவை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும் சந்தித்தார். அவரது புதிய இசை ஆல்பத்தையும் கேட்டு ரசித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு சென்றேன். “மூப்பில்லா தமிழே..தாயே” என்ற அவரது ஆல்பத்தை எனக்கு திரையிட்டு காட்டினார். கலைஞரின் செம்மொழி பாடலுக்கு இசை சேர்த்த விரல்கள் ஆயிற்றே. தமிழுக்கு மற்றொரு அணிகலனாக அவருடைய ஆல்பம் அமைந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.