செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (09:45 IST)

கள்ளக்காதலியின் 3வது மகளை 4வது திருமணம் செய்த கண்டக்டர்! – அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!

அரியலூரில் ஏற்கனவே 3 திருமணம் செய்த பேருந்து நடத்துனர் ஒருவர் தனது கள்ள காதலியின் 13 வயது மகளையும் திருமணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகருக்கை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே மூன்று பெண்களுடன் ராதாகிருஷ்ணனுக்கு திருமணம் ஆன நிலையில் குழந்தை பிறக்கவில்லை.

முன்னதாக ராதாகிருஷ்ணனுக்கு கடலூரை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருடன் ரகசிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பரமேஸ்வரியின் மூன்று மகள்களில் கடைசி மகளான 13 வயது சிறுமியை நான்காவதாக ராதாகிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டுள்ளார். சிறுமியை வற்புறுத்தி அவர் உறவு வைத்துக் கொண்ட நிலையில் சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் அலுவலர் கார்த்திகேயன் என்பவர் மகளிர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் ராதாகிருஷ்ணன் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் பரமேஸ்வரி ஆகியோரை கைது செய்துள்ளனர். சிறுமியை தாயே தனது கள்ளக் காதலனுக்கு திருமணம் செய்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.