செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (10:30 IST)

நீட் விவகாரம் என்னாச்சு? ஆளுநரை சந்திக்கும் ஸ்டாலின்

ராஜ்பவனில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். 
 
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நடத்தப்படும் நீட் தேர்வை தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும் தமிழக அரசியல்வாதிகள் இதற்காக போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் செப்டம்பர் 14 ஆம் தேதி நீட் விலக்கு கோரி சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். 
 
அதன்படி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார்.