வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (07:47 IST)

பிரதமரிடம் தொலைபேசியில் பேசி முக ஸ்டாலின்: என்ன பேசினார்?

திமுக தலைவர் முக ஸ்டாலின் திடீரெஎன பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசி உள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக திமுக தலைவர் முக ஸ்டாலின், பிரதமர் மோடியின் திட்டங்களையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் மட்டுமின்றி உதயநிதி உட்பட திமுக நிர்வாகிகள் அனைவரும் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
பிரதமரிடம் தொலைபேசியில் பேசி முக ஸ்டாலின்
இந்த நிலையில் நேற்று திடீரென திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஓபிசி குறித்த தீர்ப்பை குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது 
 
முதுநிலை மருத்துவ படிப்பில், ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு குறித்த முடிவை மத்திய அரசு 100 நாட்களில் எடுக்க வேண்டுமென சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குறித்து உடனடி நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என முக ஸ்டாலின் பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. மேலும் அவர் தமிழக அரசியல் குறித்தும் பிரதமருடன் பேசி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது