வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 26 ஜூன் 2017 (08:22 IST)

தாயை மாற்றுவது தரக்குறைவான செயல். வெங்கையா நாயுடுவுக்கு ஸ்டாலின் கண்டனம்

தாய் மொழியை மாற்றுவது தாயை மாற்றுவதற்கு சமம், அத்தகைய ஒரு தரக்குறைவான செயலை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்துள்ளார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



 


வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், இந்தித் திணிப்பு, அ.தி.மு.க குதிரை பேரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைப் பற்றி ஆவேசமாக  உரையாற்றினார்.

மேலும் சமீபத்தில் வெங்கைய நாயுடு ‘தன் தாய்மொழி இந்தி என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்ஆந்திராவில் பிறந்த வெங்கைய நாயுடு, தன் தாய்மொழியான தெலுங்கை  எப்போது இந்தியக மாற்றினார்? தாய்மொழியை மாற்றுவது, தாயை மாற்றுவதற்குச் சமம்’ என்று கடுமையாகச் சாடினார்.