வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (08:11 IST)

சென்னையில் நேற்றிரவு திடீர் மழை: இன்றும் தொடரும் என வானிலை அறிக்கையில் தகவல்!

meteorological
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்ததை அடுத்து இன்றும் சென்னையில் இரவில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் நேற்று இரவு சென்னையில் திடீரென கனமழை பெய்தது
 
சென்னை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்றும் இரவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக இன்று தட்ப வெப்பநிலை குளிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.