புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (20:24 IST)

முதல்வர் அறைக்கு வந்தே கேள்வி கேட்கலாம்: மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்கள் தங்கள் குறைகளை முதல்வர் அறைக்கு வந்து கேட்கலாம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கமும், திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு பக்கமும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவர் விருதுநகரில் பரப்புரைக் கூட்டத்தில் பேசியபோது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்கள் பிரச்சனைகளை தீர்க்காவிட்டால் முதல்வரின் அறைக்கு நேராக வந்து கேள்வி கேட்கலாம் என்றும் அந்த உரிமை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
திமுக தலைவர் முக ஸ்டாலினின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வரை நேரில் பொதுமக்கள் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது என்ற நிலை தான் பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் திமுக தலைவரின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது