தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டாலும் பாஸ்; ஸ்டாலின் கோரிக்கை!
தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் விலக்களிக்க வேண்டும் என கோரியுள்ளார் ஸ்டாலின்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் இயங்காத நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது. ஆனால் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்குமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் மறுதேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதாவது இறுதி ஆண்டு பாடங்களின் மறுதேர்வை தவிர மற்ற செமஸ்டர் பாடங்களில் மறுதேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படுவதாக உத்தரவிட்டார்.
ஆனால், தற்போது திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் விலக்களிக்க வேண்டும் என கோரியுள்ளார். அவர் கூறியதாவது, கட்டணம் செலுத்தாக மாணவர்களுக்கும் பருவத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்க வேண்டும்.
பேரிடர் நெருக்கடியில் தேர்வு கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களை முதலவர் கைகழுவி விட்டாரா என்ன என கேள்வியும் எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.