திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 டிசம்பர் 2019 (11:55 IST)

மை டியர் சன்... டாடியின் பாராட்டு மழையில் நனைந்த உதயநிதி!!

மை டியர் சன்... டாடியின் பாராட்டு மழையில் நனைந்த உதயநிதி!!
அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக தலைவர் முக ஸ்டாலின், உதயநிதியை ஏகத்தும் புகழ்ந்து பேசியுள்ளார். 
 
சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணியில் அதிக உறுப்பினர்களை சேர்த்து நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி மற்றும் சிலர் கலந்துக்கொண்டர். 
 
இந்த நிகழ்வில் ஸ்டாலின் பேசியதாவது, 1980 ஆம் ஆண்டு  மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. அப்போது 7 நிர்வாகிகளில் ஒருவராக நான் பணியாற்ற துவங்கினேன். நான் கலைஞரின் எதிர்ப்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால், நன்றாக உழைப்பேன் என்ற பெயரை கலைஞரிடம் வாங்கினேன். 
 
நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்ப்பார்க்கிறேன். இளைஞரணியில் விரைவில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பார்கள் என நம்புகிறேன். உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழகம் முழுவதும் இன்னும் ஏராளமான உறுப்பினர்கள் சேர்க்கப்பட இந்த நிகழ்ச்சி காரணமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.