1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (13:51 IST)

”அதிமுகவுக்கு சுயமரியாதையே இல்லை”.. விளாசும் காங்கிரஸ் தலைவர்

”அதிமுகவுக்கு சுயமரியாதையே இல்லை”.. விளாசும் காங்கிரஸ் தலைவர்
சுயமரியாதை இல்லாத கட்சியாக அதிமுக திகழ்ந்து வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மக்களைவயில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை சட்டதிருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் அதிமுக இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு முழு ஆதரவை அளித்துள்ளது.
”அதிமுகவுக்கு சுயமரியாதையே இல்லை”.. விளாசும் காங்கிரஸ் தலைவர்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ”குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நடைமுறைப்படுத்தினால் இந்திய ஜனநாயகமே ஆட்டம் காணும். ஆனால் இதற்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது” என குற்றம் சாட்டினார்.

மேலும் அந்த பேட்டியில், “மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதில் தமிழகமும் அடங்கும். இதனை கேட்காமல் அதிமுக அரசு சுயமரியாதையே இல்லாத அரசாக செயல்பட்டு வருகிறது” என காட்டமாக விமர்சித்துள்ளார்.