1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK. Stalin demand governor to take actions

சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளி ; நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்

M.K.Stalin
தமிழகம் மாட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி உள்ளது.  


 

 
இதில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். மேலும், சசிகலா உள்ளிட்ட அனைவருக்கும் ரூ.10 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 4 வாரத்திற்குள் சரண் அடைய வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.  ஜெ. மரணமடைந்து விட்டதால் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். 
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  “இந்த தீர்ப்பு காரணத்தால், இனிமேல் அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் எப்படி தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில், நிலையான ஆட்சியை அமைக்க கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
 
About Writer
Murugan