1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (20:02 IST)

அண்ணா பல்கலைக்கழகத்தின் செயல் இதயமற்றது: முக ஸ்டாலின்

செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் மூன்று நாள் மற்றும் ஏழு நாள் மட்டும் கெடு விதித்து இருப்பது இதயமற்ற செயல் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும் பாஸ் பெற்றதாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை குறித்து இன்னும் தமிழக அரசு பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் கட்டணம் செலுத்த மூன்று நாள் மற்றும் ஏழு நாள் கெடு விதித்து இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இது குறித்து கூறிய போது ’அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த செயல் இதயம் அற்றது என்றும், செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் இவ்வாறு கெடு விதித்து இருப்பது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று அவகாசத்தை இம்மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது