புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:41 IST)

மரம் சாய்ந்து பலியான பெண் காவலர்: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

சென்னை தலைமை செயலத்தின் முகப்பில் இருந்த மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
தமிழகத்தின் பல பகுதிகள் வடகிழக்கு பருவமழையாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மழைக்காரணமாக சென்னை தலைமை செயலகம் முகப்பில் உள்ள மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்துள்ளது.
 
இந்த விபத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கவிதா என்ற பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் ஒரு போக்குவரத்து காவலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண்காவலர் கவிதா குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பணியிலிருக்கும் போது உயிரிழந்த தலைமைக் காவலர் திருமதி.கவிதா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.