1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (13:57 IST)

சம்பளம் குடுக்காம இருக்கு.. நிலுவை தொகையை கொடுங்க..! – மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அளிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா முழுவதும் மகாத்மாக காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பின் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு பல்வேறு மராமத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.1,178 கோடி இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாகவும், இதனால் ஊதியம் வழங்க ஏற்பட்டுள்ள தாமதத்தால் பல ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழைக் குடும்பங்கள் தவித்து வருவதாகவும் கூறியுள்ள அவர், உடனடியாக நிலுவை பணத்தை வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.