திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 ஜூலை 2022 (12:01 IST)

இனிமே லாக்-அப் மரணமே இருக்கக் கூடாது..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதியின் கொடி வழங்கி கௌரவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஜனாதிபதியின் சிறப்பு கொடியை பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய அவர் “தமிழ்நாடு காவல்துறைக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது காவல்துறைக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே பெருமை. பல மாநிலங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை முன்னுதாரணமாக விளங்குகிறது.

தமிழக காவல்துறை குற்றங்களை குறைக்கும் துறையாக இல்லாமல் குற்றமே இல்லாத துறையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறை மரணங்களே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.