வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (13:41 IST)

நினைத்ததை சாதிப்பேன்....பிறந்தநாளில் சபதம் ஏற்ற மு.க. அழகிரி !

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியை, அக்கட்சித் தலைவரும் சகோதரருமான  ஸ்டாலின் திரும்பவும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. சில தினங்களுக்கு முன் சன்னோட சன்னுக்கே தடையா என்று மதுரையில் சுவரொட்டி ஒட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அரசியலில் தான் நினைத்ததை சாதிப்பேன், நினைத்ததை முடிப்பேன் என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.அழகிரி பங்கேற்றார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் நிகழ்ச்சில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
 
அப்போது, அவர் பேசியதாவது :
 
நான் கருணாநிதியின் மகன் தான். என்னைப் பார்த்தால் அதிமுகவினர் கூட பேசிச் செல்கின்றனர். ஆனால் என்னுடன் பழகிய திமுகவினர் கூட என்னோடு பேசுவதில்லை; இப்போது உள்ள நிலைமை எப்போது மாறும் என்பது எனக்கு தெரியும் என அவர் தெரிவித்தார்.
 
மேலும், திமுகவில் மீண்டும் இணைய முக அழகிரி முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.