1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (18:53 IST)

காணாமல் போன விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

Flight
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானப்படை விமானம் காணாமல் போன நிலையில்,  இந்த  விமானத்தின்  பாகங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானப்படை விமானம் வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது திடீரென்று காணாமல் போனது.

இந்த விமானப் படை விமானத்தை நீண்ட நாட்கள் தேடப்பட்ட நிலையில்  இதுகுறித்த தகவல் தெரியாததால், 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், காணாமல் போன விமானத்தின்  பாகங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், தேசிய கடல் தொழில்நுட்ப  நிறுவனம் மூலம் அனுப்பிய நீர்மூழ்கி வாகனம் பதிவு செய்த படங்களை  ஆய்வு செய்தனர்.

இதில், சென்னையில் இருந்து 310கிமீ தொலையில் கடலுக்கு அடியில் கிடக்கும் ஏஎன்-32 விமானத்தின் பாகங்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.