1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 பிப்ரவரி 2022 (09:07 IST)

இளைஞர் போல் வேஷமிட்டு மிஸ் தமிழ்நாடு அழகியை ஏமாற்றிய முதியவர்!

56 வயது முதியவர் ஒருவர் இளைஞர்போல் வேஷமிட்டு மிஸ் தமிழ்நாடு அழகியை ஏமாற்றியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
56 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தன்னை இளைஞர்போல் மாற்றிக்கொண்டு தமிழ்நாடு அழகியுடன் லிவிங் டுகெதர் வாழ்ந்ததாகவும் இந்த உண்மை தெரிந்தவுடன் தன்னை ஏமாற்றியதாக மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற அழகி காவல்துறையில் புகார் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சென்னையை அடுத்த சித்லபாக்கம் என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர். இவர் காவல் துறையில் சிற்ப்பு எஸ்ஐ பணி புரிபவர் என்று கூறிக்கொண்ட ஆண்ட்ரூஸ் என்பவருடன் அறிமுகமாகி அவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஆண்ட்ரூஸை அவர் தனது குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்து வைத்த போது அவருக்கு வயது அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது என பெண் வீட்டார் சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து அவரிடம் குடும்பத்தினர் விசாரித்த போது அவருக்கு உண்மையான வயது 56 என்றும் அவர் மிஸ் தமிழ்நாடு அழகியின் வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் சாமர்த்தியமாக தனது கணக்கிற்கு மாற்றி கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.