கொரோனாவே இன்னும் முடியல.. அதுக்குள்ள புது வைரஸா? – ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

Pig
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 30 ஜூன் 2020 (10:18 IST)
உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மற்றுமொரு புதிய வைரஸ் உருவாகியுள்ளது ஆய்வாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதை தடுக்க மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகல் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் புதிய வைரஸ் பரவுவதற்கான மற்றொரு சாத்தியத்தை சீன ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பன்றிகளுக்கு புதுவிதமான வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் மனிதர்களிடையே எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

தற்போதைக்கு இந்த வைரஸால் ஆபத்து இல்லை என்றாலும், வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இதனால் ஆபத்தான சூழல் உருவாகலாம். இதனை எதிர்கொள்ள மனிதர்களுக்கு நோயெதிர்ப்பு திறன் இருக்காது. இப்போது வரை இதனால் ஆபத்து இல்லை என்றாலும், தொடர்ந்து இதை கண்காணிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :