திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (11:57 IST)

ஆண்களுக்கு பேருந்து கட்டணம் உயர்த்தவில்லை! – ஓபிஎஸ்க்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்

அரசு பேருந்துகளில் ஆண்களுக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டை அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுத்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த நிலையில் அரசு பேருந்துகளில் மகளிர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வரவேற்பை பெற்ற நிலையில் பெண்களுக்கு இலவச டிக்கெட் கொடுத்துவிட்டு ஆண்களுக்கான டிக்கெட்டை அதிகரித்து விட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ராஜகண்ணப்பன் “பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்க, ஆண்களுக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை. பொதுவாக வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.