1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (10:19 IST)

முதன்முறையாக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கொரோனா காரணமாக முன்பதிவில்லாத ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் காரைக்குடி – திருவாரூர் வழிதடத்தில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்பு முன்பதிவு செய்து பயணிக்கும் சிறப்பு ரயில்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காரைக்குடி – திருவாரூர் வழிதடத்தில் ரயில் சேவை இயக்க தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் முன்பதிவில்லா பாசஞ்சர் ரயில் சேவையை இவ்வழி தடத்தில் தொடங்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்த மற்ற வார நாட்களில் திருவாரூரில் மதியம் 2.15க்கும், காரைக்குடியில் 2.30க்கும் இந்த ரயில் சேவை புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.