1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 18 செப்டம்பர் 2021 (10:12 IST)

ஓடும் ரயிலில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு… வீட்டில் இருந்து போட்ட ஸ்கெட்ச்

சென்னை திருவொர்ற்றியூரில் பெண்ணிடம் சங்கிலி பறித்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, தனது குழந்தைகளுடன் உறவினரின் வீட்டு விழாவுக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்துள்ளார். இதைத் தெரிந்து கொண்ட அவரின் பகுதி இளைஞர்களான மண்டை தினேஷ் மற்றும் கிளி தினேஷ் ஆகிய இருவரும் அவரைப் பின் தொடர்ந்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் விஜயலட்சுமி குழந்தையை வைத்துக்கொண்டு ரயிலில் ஏறி ரயில் கிளம்பிய போது அவரின் கழுத்தில் இருந்த 11 பவுன் சங்கிலியை அறுத்து ஓடியுள்ளனர். இதனால் விஜயலட்சுமி அலற சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் பிளாட்பார்மில் இருந்த பொதுமக்களே அவர்களை சுற்றி வளைத்து பிடித்து ரயில்வே போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.