புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2019 (11:00 IST)

கப்சிப் சினிமாகாரர்கள்.. பேனர் என்ன அரசியல்வாதிகள் மட்டுமா வைக்கிறாங்க??

சினிமா துறையை சேர்ந்த ஒருவரும் பேனர் விழுந்து மரணம் அடைந்த சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவ்க்காத நிலையில் நடிகர் விவேக் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
சென்னை பள்ளிகரணையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தமிழ்கம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த விபத்து அடிப்படையில், லாரி ஓட்டுநர் மனோஜ் என்பரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அந்த பேனரை அச்சிட்ட அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 
சுபஸ்ரீயின் மரணத்தால் அரசியல் கட்சி தலைவர்கள் இனி பேனர் வைக்க கூடாது என தங்களது தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் பேனர்கள் அரசியல்வாதிகள் மட்டும் வைப்பதில்லை, சினிமா நடிகர்களுக்கு அவரது ரசிகர்களால் வைக்கப்படுகிறது. 
 
ஆனால், சினிமா துறையை சேர்ந்த எவரும் இதை கண்டுக்கொள்ளவில்லை. பல முறை நடிகர்களுக்கு பேனர் கட்ட போய் ரசிகர்கள் மரணமடைந்த சம்பவமும் நடந்துள்ளது. ஆனால், இப்போது நடிகர் விவேக் மட்டும் இதற்கு குரல் கொடுத்துள்ளார். 
நடிகர் விவேக் கூறியதாவது, எங்கு பார்த்தாலும் போஸ்டர் ஒட்டுவதை நான் ஏற்கனவே கண்டித்துள்ளேன். சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். 
 
இந்த நிகழ்வு மிகவும் வருந்ததக்கது. துரதிர்ஷ்டவசமானது. கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார். 
 
விவேக்கின் இந்த கருத்து பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அதோடு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சமூகத்திற்கு நல்லது.