திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2018 (15:24 IST)

சட்டசபையில் தினகரனை பார்த்து கும்பிட்ட அமைச்சர்!

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. டிடிவி தினகரன் கலந்துகொள்ளும் முதல் கூட்டத்தொடர் என்பதால் இது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
தினகரன் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதால் சில தினங்களுக்கு முன்னர் கூடிய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பல அறிவுரைகளை வழங்கியிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபையில் தினகரனுடன் யாரும் பேசக்கூடாது, சிரிக்க கூடாது, அவருக்கு வணக்கம் வைக்க கூடாது என பல கண்டிஷன்கள் போடப்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் நேற்று தினகரனை சட்டசபையில் இரண்டு எம்எல்ஏக்கள் வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்தது எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் இன்று ஒரு அமைச்சர் தன்னை பார்த்து வணக்கம் தெரிவித்ததாக தினகரன் கூறியுள்ளார்.
 
சட்டசபையில் அமைச்சர் தங்கமணியின் பேச்சுக்கு பதில் அளிக்க அனுமதி தராததால் டிடிவி தினகரன் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சட்டசபையில் யாரும் பார்க்காத நேரத்தில் ஒரு அமைச்சர் தன்னை பார்த்து கும்பிட்டு வணக்கம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.