செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2016 (13:34 IST)

கரூர் மக்களின் காதில் பூ சுற்றுகின்றாரா போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்?

கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ வாக அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவருக்கு முன்னர் இதே தொகுதியில் எம்.எல்.ஏ வாகவும், அமைச்சராகவும் இருந்த செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது, கடந்த 2014 ம் வருடம், ஆகஸ்ட் மாதம் அப்போது இதே அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அன்று படித்த அறிக்கையில், "ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு இணையான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்,


 

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், தனியார் அமைப்புகளுடன் இணைந்து டயாலிசிஸ் (Dialysis), டயாக்னோசிஸ் (Diagnosis), டயாபிடிஸ் (Diabetes) மையங்கள் நிறுவப்படும். இந்த மையங்களில் கூடுதலாக MRI மற்றும் C.T. ஸ்கேன்கள் நிறுவப்படும் என்று அறிவித்ததோடு, கரூர் மாவட்டத்தில் எந்த ஒரு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியும் இல்லாததைக் கருத்தில் கொண்டு, கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும், மாணவ, மாணவியரும் பயன்பெறும் வகையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றார்.

ஆனால் இந்த வருடம் ஜூலை மாதம் 14 ம் தேதி கரூர் மற்றும் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். கரூர் மற்றும் புதுக்கோட்டையில் தலா 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையுடன், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டவும், மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கவும் தலா 229 கோடி 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதலும் நிதி ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார்.

ஆனால் மருத்துவக்கல்லூரி அறிவிக்கப்பட்டதே, தவிர இதுவரை இன்று வரை எங்குள்ளது என்றும் தெரியவில்லை, ஆனால் அப்போது அ.தி.மு.க அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். என்றும் தற்போது தம்பித்துரையின் ஆதரவாளராக அதே துறையில் அமைச்சரும், மாவட்ட செயலாளர் பதவியும் வகிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருப்பதால் செந்தில் பாலாஜி தேர்வு செய்த இடத்தில் மருத்துவமனை அமைக்காதது ஒன்று ? மற்றொன்று அரசியல் காழ்புணர்ச்சி., தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முதலில் மாவட்ட செயலாளராக இருந்த போது, சணப்பிரட்டி கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டு இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் அம்மாவின் உத்தரவை காற்றில் பறக்க வைத்ததோடு, தற்போது அவர் ஜெயித்த கரூர் தொகுதியில் குறைகளை மக்களிடையே கேட்காமல், தி.மு.க எம்.எல்.ஏ தொகுதியான குளித்தலை தொகுதியில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை என்று இரு நாட்களாக குறைகளை கேட்டறிந்தார்.

ஏன் இந்த தொகுதியில் மக்கள் குறைகளை கேட்க வில்லை., மேலும் மாவட்ட செயலாளராக அங்கம் வகிக்கும் இவர், இவரது கட்சியில் போட்டியிட்டு ஜெயிக்க வைத்த செந்தில் பாலாஜி க்கு நன்றி தெரிவிக்க கூட அரவக்குறிச்சி தொகுதிக்கு வராமல், ஒரு கட்சி சார்ந்த நிகழ்ச்சியை கூட செய்யாதது அக்கட்சியினரிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ கரூர் மாவட்டத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் மட்டுமில்லாமல் எம்.பி தேர்தலும் வருகின்றது அல்ல ? என்கின்றனர் அடித்தள மக்களும், சரி அம்மாவின் உத்திரவையும் காற்றில் பறக்க விட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, அதே அ.தி.மு.க கட்சியில் மாவட்ட செயலாளர் பதவியும் வகிப்பது தற்போது சிக்கல் ஏற்படுத்தியுள்ளது என்று அ.தி.மு.க வினர் ஆங்காங்கே காதுபட தெரிவித்து வருகின்றனர்.


கரூரிலிருந்து சி.ஆனந்தகுமார்