புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2020 (23:49 IST)

தனது தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபடும் சிறுவன்

கரூர் மாவட்டம் செங்கம் ஊராட்சி  மேலாடை பகுதியை சார்ந்த கவிக் குமார் என்ற 12 வயது சிறுவன் ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு விடுமுறையில் உள்ள காரணத்தால் தனது தந்தைக்கு உதவியாக விவசாய பணிகள் செய்து வருகிறார்.

கரூர் மாவட்டம் செங்கம் ஊராட்சி  மேலாடை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 40 இவருக்கு 3 மகன்கள் உள்ளனர் இதில் இவரது இரண்டாவது மகன் கவிக் குமார் என்பவர் வயது 12 ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு விடுமுறையில் உள்ள காரணத்தால் தனது தந்தைக்கு உதவியாக விவசாய பணிகள் செய்து வருகிறார் பல சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது எப்படி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதும் பல பிரபலங்கள் டிக்டாக்கில் சமையல் செய்வது உடற்பயிற்சி செய்வது போன்ற பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் ஆனால் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் கவிக்குமார் பொழுது போக்கில் ஆர்வம் காட்டாமல் தனது தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ஏர் உழுவது விதைப்பது ஆடு மாடுகளை பராமரிப்பு அவற்றிற்கு உரிய தண்ணீர் பாய்ச்சுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஈடுபட்டுள்ளது.