புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (21:42 IST)

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

தமிழக வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்து வரும் உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்க்ள் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததால் உடனடியாக அவர் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உடல்நலம் குறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தனர்.

அமைச்சரின் உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.