புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 பிப்ரவரி 2019 (08:12 IST)

பிரசவத்தின் போது கை தவறி விழுந்த குழந்தை பலி: கோவையில் அதிர்ச்சி

கோவையில் பிரசவத்தின் போது தனியார் மருத்துவனை நர்ஸ் குழந்தையை கீழே தவறவிட்டதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
 
கோவை மாவட்டம் அவாரம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 7ந் தேதி விகரம் என்ற மென்பொறியாளர், தனது மனைவி பவித்ராவை பிரசவத்திற்கு அனுமதித்துள்ளார். அவர்களுக்கு அன்றிறவே அழகான ஆண் குழந்தை பிறந்ததாக தெரிகிறது.
 
ஆனால் மருத்துவமனை நிர்வாகம், விக்ரமை அழைத்து உங்களுக்கு குழந்தை பிறதிருக்கிறது என கூறினர். சந்தோஷத்தின் உச்சத்திற்கு விக்ரம் சென்றார். ஆனால் அடுத்ததாக ஒரு குண்டை தூக்கி போட்டனர். குழந்தைக்கு தலையில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் வெண்டிலேட்டரில் வைக்க வேண்டும் என கூறியிருக்கின்றனர். இதனால் அவர் பேரதிர்ச்சிக்கு ஆளாகினார். 
 
இந்நிலையில் நேற்று மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்துவிட்டதாக கூறி விக்ரமிடம் குழந்தையின் உடலை கொடுத்துள்ளனர். விக்ரமும் அவரது குடும்பத்தாரும் குழந்தையின் உடலை வாங்கினர். குழந்தையின் தலையில் ரத்தக் கசிவை பார்த்த அவர்கள் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டனர். ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரனாக பேசினர்.
 
பிறகுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. பிரசவத்தின்போது நர்ஸ் கைதவறி குழந்தையை தவறவிட்டதால், குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. இதனையறிந்த விக்ரமும் அவரது குடும்பத்தாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த குழந்தையை கையில் ஏந்தியவாறு விக்ரம் அலைந்தது பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் விதமாக இருந்தது.  இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.