1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (12:06 IST)

ஆம்ஸ்ட்ராங் போல நிலவில் ஈபிஎஸ்... அமைச்சர்களின் அன்லிமிட்டெட் ஃபன்!!

அதிமுக அமைச்சர்கள் முதல்வரை புகழ்ந்து பேசுகிறோம் என்ற நினைப்பில் மக்களுக்கு அன்லிமிட்டெட் ஃபனை வாரி வழங்கி வருகின்றனர். 
 
ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு மாற்றப்பட்டுள்ளார், இதற்கு டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததற்காக தமிழக அரசு செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 
 
இதனையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அவர் கூறியதவாது, டெண்டர் இன்னும் விடவே இல்லை, அதற்குள் முறைகேடுக்கு ஒத்துழைக்காமல் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 
 
திமுகவினரலால் நிலவை காட்டி சோறு ஊட்ட மட்டுமே முடியும், ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால் ராக்கெட்டை எடுத்து நிலவில் ஆம்ஸ்ட்ராங்கை போல் இறங்குவார் என பேசினார். இவரின் இந்த பேச்சு சமூக வலைத்தள வாசிகள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.