1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (21:32 IST)

7,908 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி

udhayanithi stalin
நம் இளைஞர்களின் ஆங்கில மொழித்திறனை வளர்க்கும் வண்ணம் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் 25 ஆயிரம் பேருக்கான ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சியை சென்னை கலைவானர் அரங்கில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

''சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை - தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், வேலைவாய்ப்புக்கான தகுதியை பெற நிறுவனங்கள் எதிர்பார்க்கின்ற திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

அந்த வகையில், நம் இளைஞர்களின் ஆங்கில மொழித்திறனை வளர்க்கும் வண்ணம், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - சீர்மரபினர் - ஆதி திராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் 25 ஆயிரம் பேருக்கான ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சியை சென்னை கலைவானர் அரங்கில் இன்று தொடங்கி வைத்தோம்.

மேலும், திறன் பயிற்சி பெற்ற தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளைச் சேர்ந்த 442 இளைஞர்கள் மற்றும் குறுகிய கால திறன் பயிற்சி பெற்ற 7,908 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினோம். பயிற்சி பெறவுள்ளோர் - பயிற்சிக்கான சான்றிதழை பெற்றோர் - பணி நியமன கடிதங்களை பெற்ற அனைவருக்கும் என் அன்பும், வாழ்த்தும்.''என்று தெரிவித்துள்ளார்.