திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (18:14 IST)

கல்பனா சாவ்லா விருது பெற்ற முத்தமிழ்ச் செல்வியை வாழ்த்திய அமைச்சர் உதயநிதி

udhay- tamiil slevi
கல்பனா சாவ்லா விருது பெற்றதையடுத்து முத்தமிழ்ச்செல்வியை தமிழக அமைச்சர் உதயநிதி வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தும் - தன்னலம் பாராது சமூக சேவையாற்றியும் வருகிற இளைஞர்கள் - இளம்பெண்களை அங்கீகரிக்கும் விதமாக, "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" - ஊக்கத்தொகை ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுவது வழக்கம்.

அந்தவகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள், "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 2023" மற்றும் தலா ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையை, 4 இளைஞர்கள் & 3 இளம்பெண்களுக்கு இன்றைய சுதந்திரதின நிகழ்ச்சியின் போது வழங்கி வாழ்த்தினார்கள்.

விருது & ஊக்கத்தொகையை பெற்ற சகோதரர்கள் தஸ்தகீர், தினேஷ்குமார், கோபி, ராஜசேகர், மற்றும் சகோதரிகள் விஜயலட்சுமி, சந்திரலேகா, கவிதா ஆகியோரை நேரில் பாராட்டினோம். நம் முதலமைச்சர் அவர்களின் கரங்களால் விருதுகளை பெற்ற அவர்களின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும் ‘’என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  ‘’உயிரைப் பணையம் வைத்து எவரஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த சகோதரி முத்தமிழ்ச்செல்விக்கு, மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள், வீர தீர செயல்புரிந்தோருக்கான கல்பனா சாவ்லா விருதை சுதந்திர நாள் நிகழ்ச்சியின் போது இன்று வழங்கினார்கள்.

முத்தமிழ்ச்செல்வியின் சாதனைக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை உறுதுணையாக இருந்து வருகிறது. கல்பனா சாவ்லா விருது பெற்றதையடுத்து முத்தமிழ்ச்செல்வி இன்று நம்மை சந்தித்தார். அப்போது, அவர் இன்னும் பல உயரங்களை தொட வாழ்த்தி மகிழ்ந்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.