திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (12:44 IST)

மின் தடை வேறு: மின்வெட்டு வேறு! குழம்பாதீங்க! – அமைச்சர் தங்கமணி விளக்கம்!

ஊரடங்கை பயன்படுத்தி பல இடங்களில் மின்வெட்டு செய்யப்படுவதாக பேசப்பட்ட நிலையில் அதுகுறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர். இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பல இடங்களில் சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கனமழை பெய்த பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இதை பலர் தமிழகத்தில் மின்வெட்டு செய்வதாக கூறிய நிலையில் அதுகுறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் “மின்வெட்டுக்கும், மின் தடைக்கும் வேறுபாடு உள்ளது. இயற்கை பேரிடர்களால் தற்காலிகமாக மின்சாரம் தடைபடுவது மின் தடை. தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது மின் தடைதானே தவிர, தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை” என தெரிவித்துள்ளார்.