வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (17:22 IST)

நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

திருநெல்வேலி உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் அந்த மாவட்டங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கொடுத்து நான்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சிவகாசி மீனா ஆலோசனை நடத்தி வருகிறார்.

தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் மழை, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 4 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தென்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு  நதி நீர்  இணைப்புத்  திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Edited by Siva