செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 ஜூலை 2022 (17:43 IST)

சென்னையில் தொழில் மாநாடு: தேதியை அறிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

Thangam Thennarasu
சென்னையில் தொழில் மாநாடு நடைபெற இருப்பதாக அறிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு அதுகுறித்த தேதியையும் அறிவித்துள்ளார். 
 
சென்னை தாஜ் ஹோட்டலில் ஜூலை 4-ஆம் தேதி தொழில் மாநாடு நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் 
 
இந்த மாநாட்டில் ரூ.3,494 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் 
 
நான் முதல்வன் திட்டத்தால் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு வழங்கப்படுகிறது என்றும், 29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணும் பணி நிறைவு பெற்றுள்ளதாகவும், 25 திட்டங்கள் அனுமதி பெறும் நிலையில் உள்ளது  என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்