திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (09:08 IST)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று 40வது நாளாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பதாக அறிவித்திருந்தது. இதனை அடுத்து பெட்ரோல் டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் இன்றும் பெட்ரோல் டீசல் விலைகள் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் இருப்பினும் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்து கொண்டே வருவதால் விரைவில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.102.63 எனவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.94.24 எனவும் விற்பனையாகி வருகிறது.