1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 9 டிசம்பர் 2023 (18:36 IST)

மின் கட்டணத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம்: அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு..!

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இது குறித்த இன்னொரு முக்கிய தகவலையும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
 
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் டிசம்பர் 18ஆம் தேதி வரை மின் கட்டணம்  தாமத கட்டணம் இன்றி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் மின் கட்டண அபராத தொகை இல்லாமல் வீடுகளுக்கு மட்டுமின்றி சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்ற அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். எனவே சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் 18 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran