1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (08:44 IST)

நிர்மலாதேவி கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு எஸ்கேப் ஆன அமைச்சர்

கடந்த சில நாட்களாகவே அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்ட நிர்மலாதேவி விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சனை குறித்து கருத்து கூறாத அரசியல்வாதிகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் நிர்மலாதேவி விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விகேட்டபோது அவர்களை கையெடுத்து கும்பிட்டு பதில் சொல்லாமல் சென்றுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
 
இன்று செய்தியாளர்களை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தபோது நிர்மலாதேவி விவகாரம் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன், என்னை பொருத்தவரை என்னுடைய துறையான பள்ளிக்கல்வித்துறை சம்பந்தமான கேள்விகளை தவிர பிற துறையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன். அதற்கு வேறு அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அவரக்ளிடம் கேளுங்கள் கூறி பத்திரிகையாளர்களை கையெடுத்து கும்பிட்டு அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்