செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (08:50 IST)

விலையை அதிகரித்தது டாஸ்மாக்: மதுப்பிரியர்கள் வேதனை!

TASMAC
டாஸ்மாக்குகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலையை அதிகரித்துள்ள செய்தி மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 5300 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் கட்டுபாட்டில் கீழ் இயங்கும் இந்த மதுபானக்கடைகள் மூலமாக அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

இந்நிலையில் இன்று முதல் டாஸ்மாக் மது வகைகளுக்கு விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ல் விலை உயர்த்தப்பட்ட பிறகு மீண்டும் தற்போது விலை உயர்த்தப்படுகிறது. அதன்படி குவார்ட்டருக்கு ரூ.10, ஆஃப்புக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பீர் பாட்டில்களுக்கு தற்போதைய விலையுடன் 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு மது பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதால் நேற்று டாஸ்மாக்குகளில்  கூட்டம் அலை மோதியது. இந்த விலை உயர்வுக்கு மது பிரியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.