1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2024 (13:30 IST)

ராமதாஸை அடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கும் வேலையில்லை.. அமைச்சர் சேகர்பாபு..!

sekar babu
ராமதாசுக்கு வேறு வேலை இல்லை, அதனால் அவர் தினந்தோறும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் கூறிய நிலையில், தற்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு "எடப்பாடி பழனிச்சாமிக்கு வேலையில்லை" என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "உதயநிதி அவர்கள் தனது பிறந்த நாளின் போது வேண்டுகோளுடன் எடுத்தார்: 'தனக்கு பேனர்கள் வேண்டாம், ஆடம்பரம் வேண்டாம், மக்களுக்கு உதவி செய்தால் போதும்' என்று கூறியிருந்தார்.

அதனால் தான் இன்று 21 ஜோடிகளுக்கு நாங்கள் திருமணம் செய்து வைத்துள்ளோம். இதை ஆடம்பரம் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? பார்ப்பவர் கண்ணில் கோளாறு இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. மஞ்சள் காமாலை கண்களுக்கு அனைத்தும் அஞ்சலாக தான் தெரியும்.

மொத்தத்தில் எங்கள் தலைவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வேலை இல்லை; அதனால் இப்படி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்திருந்தார்.


Edited by Siva