ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2018 (14:49 IST)

இறைவன் அருளால் ஆயிரங்கால் மண்டபம் பாதிப்பு: என்ன அமைச்சரே இப்படி உளறுரீங்க!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் அருகில் உள்ள ஆயிடங்கால் மண்டபம் இறைவன் அருளால் பாதிக்கப்பட்டுள்ளது என அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
 
சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மளமளவென எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இந்த சம்பவம் ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து தீ விபத்து நடந்த பகுதியை அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்பி உதயகுமார், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டதால் மீனாட்சி அம்மன் கோவில் தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
 
இரவில் ஏற்பட்ட இந்த தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் அருகில் உள்ள திருமண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவை இறைவன் அருளால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். இறைவன் அருளால் பாதுகாக்கப்பட்டுள்ளது என கூறுவதற்கு பதிலாக பாதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் தவறாக கூறியுள்ளார்.