திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (19:57 IST)

இருக்கு ஆனால் இல்லை! இல்லை ஆனால் இருக்கு! – புதிர் போட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

தேர்தல் கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி பிரச்சாரத்திற்கு வராதது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் சில மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “அதிமுகவில் பிரச்சினை இருப்பது போல தெரியும். ஆனால் அதிமுகவில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் திமுக பிரச்சினை இல்லாமல் இருப்பது போல தெரியும். ஆனால் அங்கே கட்சிக்குள் நிறைய பிரச்சினை இருக்கிறது.

திமுகவில் இடைத்தேர்தல் பணிகள் எம்.பி கனிமொழியிடம் வழங்கப்பட்டன. ஆனால் அவர் ஏன் பிரச்சாரத்திற்கு வராமல் வெளிநாடு சென்றார்? ஸ்டாலின் அவரை கண்டு பயப்படுகிறாரா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேசமயம் அதிமுக இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெறுவது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பதில் புதிர் போல இருப்பதால் இப்போது எந்த கட்சியில் குழப்பம் இருக்கிறது அல்லது இல்லை என்று குழப்பத்தில் உள்ளனர் அரசியல் விமர்சகர்கள் சிலர்!