1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2023 (13:42 IST)

நடைபயணத்தால் அண்ணாமலைக்கு கால் வலிதான் வரும்: அமைச்சர் ரகுபதி

Minister Ragupathi
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நடை பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் இந்த நடைபயணத்தால் அண்ணாமலைக்கு கால் வலி தான் வரும் என்றும் வேறு எந்த பயனும் இருக்காது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.  
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்க உள்ளார். வழி நெடுகிலும் அவர் திமுகவின் ஊழல் மற்றும் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இன்றைய நடைபயணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வர உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அண்ணாமலையில் நடைபயணம் குறித்து திமுக உள்பட ஒரு சில கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். 
 
அந்த வகையில் அமைச்சர் ரகுபதி இது குறித்து கூறியபோது அண்ணாமலை நடைபயணத்தால் அவருக்கு கால் வலி தான் வரும் என்றும் வேறு எந்த பாதிப்பும் வராது என்றும் தெரிவித்தார். அண்ணாமலை நடை பயணத்தால் தமிழகத்தில் எந்த விதமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva