வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (20:08 IST)

ChatGPTயால் வேலையிழந்த கொல்கத்தா மாணவி.. வேதனையுடன் பதிவு..!

ChatGPTயால்  வேலை இழந்த கொல்கத்தா மாணவி மிகவும் வேதனையுடன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் ChatGPT தற்போது மனிதர்கள் செய்யும் வேலையை மிகவும் வேகமாகவும் விவேகமாகவும் செய்து விடுகிறது. இதனால் பலர் வேலை இழந்து வருகின்றனர் என்பதும் எதிர்காலத்தில் இன்னும் அதிக வேலை இழப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த மாணவி ஒருவர் பகுதி நேரமாக கட்டுரை எழுதும் வேலையை பார்த்துக் கொண்டு வந்த நிலையில்ChatGPTயால்  அந்த வேலை பறிபோனது என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
இதனால் வீட்டு செலவுகளை தன்னால் கவனிக்க முடியவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அவருக்கு நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்
 
Edited by Mahendran