தொடர்புடைய செய்திகள்
- ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு 7 வீரர்கள் தகுதி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு- அமைச்சர் உதயநிதி
- ஒடிசா ரயில் விபத்து நடப்பதற்கு முன் எடுத்த வீடியோ வைரல்
- ஒடிசா : இன்ஜின் இல்லா சரக்கு ரயில் ஏறி 6 பேர் பலி
- ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தை கடந்து சென்றது சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ்..!
- ரயில்வே நிலையத்தில் சிக்னலை உடைக்க முயன்ற இளைஞர்...பரபரப்பு சம்பவம்
செய்தி வாசிப்பாளர் ஆனது லிசா என்னும் ஏஐ தொழில்நுட்பம்.. இந்த வேலையும் போச்சா?
ஏஐ தொழில்நுட்பம் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்ட நிலையில் தற்போது செய்தி வாசிப்பாளர் துறையிலும் நுழைந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் செய்தி நிறுவனம் ஒன்று ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லிசா என்னும் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தி உள்ளது
இந்த ஏஐ தொழில்நுட்ப செய்தி வாசிப்பாளர் ஆங்கிலம் மற்றும் ஒடிசா மொழிகளில் செய்தியை வாசிக்கின்றது. அதுமட்டுமின்றி 18 மொழிகளில் லிசா செய்தி வாசிக்கும் திறமை உள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பல்வேறு துறைகளில் மனிதர்களின் வேலையை ஏஐ தொழில்நுட்பம் பறித்துள்ள நிலையில் தற்போது செய்தி வாசிப்பாளர் துறையிலும் நுழைந்து விட்டதால் அந்த துறையில் உள்ள பணியாளர்களின் வேலையும் பறிபோக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva
