வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 17 மே 2023 (23:13 IST)

தினமும் 40 கிமீ நடந்து சென்ற தையல் கலைஞருக்கு உதவிய அமைச்சர் பி.டி.ஆர்

ptr- nagesh
மதுரை மாவட்டத்தில், 40 ஆண்டுகளாக தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் தூரம் வரை தன் 17 கிலோ எடையுள்ள தையல் மெஷினுடன் நடந்தே சென்று வந்த தையல் கலைஞர் நாகேஷுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பிரசன்னா காலனி 9 வது குறுக்குத்தெருவில் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.300 ரூபாய்க்கு வாங்கிய 17 கிலோ எடையுள்ள தையல் எந்திரத்துடன் தினமும்  30 முதல் 40 கிலோமீட்டர் தூரம் வரை   நடந்தே சென்றுவந்த தையல் கலைஞர் நாகேஷ் பற்றிய வீடியோ தனியார் யூடியூப் சேனலில் வெளியான நிலையில், அமைச்சர் பிடி.ஆர் பழனிவேல் தியாகராக நாகேஷிற்கு உதவி செய்துள்ளார்.

கடந்த 40 வருடங்களாக, தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளைத் தைத்துத் தரும் பணியினை செய்து வரும் டெய்லர் நாகேஷ் குறித்து சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் யூடியூப் சேனலில் தகவல் வெளியாகி இருந்தது.

இதுகுறித்து பிடிஆர். அலுவலக டுவிட்டர் பக்கத்தில்,

’’அந்த காணொளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு டெய்லர் நாகேஷ் தனது வாழ்வாதாரத்துக்கு உதவிடுமாறு ஒரு கோரிக்கை வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு  முக.ஸ்டாலின்

அவர்கள் அவருக்கு வீட்டு மனை வழங்க உத்தரவிட்டார். மாண்புமிகு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  திரு பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்  அவர்கள் டெய்லர் நாகேஷை தன் வீட்டிற்கு அவரது காரில் அழைத்து வந்து அவரது வாழ்வாதாரத்துக்குத் தேவையான நிதியுதவியினை அளித்து உதவினார்.’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.