ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 5 மே 2023 (12:05 IST)

கள்ளழகரை பார்க்க வந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு?? – மதுரையில் பரபரப்பு!

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று நள்ளிரவு நடந்தது. இந்த வைபவத்தை காண மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிந்திருந்தனர்.

அவ்வாறாக அழகர் வைபவத்தை காண வந்த எம்.கே.புரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் சூர்யா ராமராயர் மண்டகபட்டி அருகே தலையில் அடிப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பகுதியில் மது அருந்திவிட்டு அரிவாளோடு திரிந்த இளைஞர்கள் சிலரோடு சூர்யாவுக்கும், அவரது நண்பர்களுக்கும் மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுபோதையில் இருந்த இளைஞர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கள்ளழகர் வைபத்தில் நடந்த இந்த அசம்பாவிதம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K