வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (11:53 IST)

தொடர் அமளி எதிரொலி: பாராளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் வரை ஒத்திவைப்பு..!

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சியை உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களீன் அமளி காரணமாக நான்கு நாட்களும் எந்த விதமான மசோதாக்களும் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன என்பதை பார்த்து வருகிறோம். 
 
லண்டனில் ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்களும் அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை செய்ய குழு ஆரம்பிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் கோஷமிட்டு வருவதை அடுத்து கடந்த நான்கு நாட்களாக பாராளுமன்றம் ஸ்தம்பித்தது.
 
இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியவுடன் மீண்டும் இரு தரப்பினரும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து பாராளுமன்றம் திங்கள் வரை ஒதுவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகல் பொறுப்பின்றி நடந்து கொள்வதாகவும் மக்களின் வரிப்பணம் வீணாகி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran