1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (16:30 IST)

தமிழகத்தில் ஜூலை 18 ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு!

தமிழகத்தில் ஜூலை 18 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரி படிப்புகளில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பில் தொழிற்கல்வி படித்தவர்களும் பட்ட பொறியியல் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும். பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 85,902 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் மாணவர்களுக்கு இருக்க கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.